நேபாளத்தைச் சேர்ந்த பள்ளிப் பிள்ளைகள் சிலர் மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்லும்போது எடுத்த கியூட்டான மற்றும் கெத்தான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வழக்கமாக மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்வது என்பது குழந்தைகளுக்குச் சற்று சிரமமான காரியமாக இருக்கும்.

ஆனால், இந்த நேபாளச் சிறுவர்கள் மழையைப் பற்றிக் கவலைப்படாமல், மிகவும் உற்சாகத்தோடும் கெத்தான பாணியிலும் பள்ளிக்கு நடந்து செல்லும் காட்சி இணையவாசிகளின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மழையில் நனையாமல் இருக்க அந்தப் பள்ளிச் சிறுவர்கள் அணிந்திருந்த விசித்திரமான மற்றும் வண்ணமயமான ரெயின்கோட்டுகள் அவர்களின் தோற்றத்திற்கு மேலும் அழகூட்டின.

நடைபயிற்சியின் போது அவர்கள் காட்டிய கூலான ‘ஆட்டிட்யூட்’ மற்றும் முகத்தில் தவழ்ந்த புன்னகை ஆகியவை, பள்ளிப் பருவத்தின் எந்தவொரு கவலையுமற்ற சுதந்திரமான நாட்களை நினைவூட்டுவதாக அமைந்திருந்தன. சுற்றியுள்ள சூழல் மப்பும் மந்தாரமுமாக இருந்தாலும், இந்தச் சிறுவர்களின் சுட்டித்தனமும் சுறுசுறுப்பும் அந்த இடத்தையே உயிரோட்டமுள்ளதாக மாற்றியிருந்தது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் “குழந்தைப் பருவம் என்பது எதைப் பற்றியும் கவலைப்படாமல் இதுபோன்ற தருணங்களை அனுபவிப்பதுதான்” என்றும், “ரெயின்கோட் போட்டுகிட்டு இவ்ளோ கெத்தா போறாங்களே!” என்றும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மழைக்காலத்தின் சோம்பலை விரட்டி, பார்த்தவுடனேயே மனதை மகிழ்ச்சியடையச் செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிரடி ட்ரெண்டிங்கில் உள்ளது.

“>