வேகமாகச் செல்லும் நெடுஞ்சாலையில், அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றின் டயர் எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவிலேயே மெல்லச் சரியத் தொடங்கியது.
பாரம் அதிகமாக இருந்ததால் லாரி கவிழ்ந்து பெரும் சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலை உருவானது. ஆனால், அந்த இக்கட்டான தருணத்தில் பின்னால் வந்த ஒரு பெரிய டிரக், லாரி சரியப்போவதைக் கண்டு நொடிப் பொழுதில் சாதுரியமாகச் செயல்பட்டது.
டிரக் ஓட்டுநர் தனது சமயோசித புத்தியையும் அனுபவத்தையும் பயன்படுத்தி, வேகமாகச் சென்று அந்த லாரியின் பக்கவாட்டில் வாகனத்தை நிறுத்தி அது கவிழாமல் தடுத்து நிறுத்தினார். நொடிப் பொழுதில் அவர் எடுத்த இந்தச் சாதுரியமான முடிவால், நெடுஞ்சாலையில் ஏற்படவிருந்த மிகப்பெரிய விபத்துத் தவிர்க்கப்பட்டுப் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இந்தக் கொடூரமான தருணம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, டிரக் ஓட்டுநரின் திறமையையும் மன தைரியத்தையும் நெட்டிசன்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். “உண்மையான ஹீரோக்கள் இதுபோன்ற ஆபத்தான தருணங்களில்தான் உருவெடுக்கிறார்கள்” என்று இணையவாசிகள் அவருக்குத் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.
See this Instagram video by @centronoticiasmx https://t.co/Ocl0Bh15RI
“>
