சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,06,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14509 ரூபாய்க்கும், ஒரு சவரன் 116702 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
