திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கு முன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, கேரளாவை சேர்ந்த நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணனிடமிருந்து ரபேல் வாட்சை வாங்கினேன். 2021 மார்ச்சில் ரபேல் வாட்சை வாங்கிய ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார். மேலும் வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் என்னுடைய நண்பர்கள் தான் கொடுக்கிறார்கள்.

2021 முதல் என் கையில் இருக்கும் ஒரே வாட்ச் இதுதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால், அரசியலில் எனக்கு மாதம் ரூ.7-8 லட்சம் மாதத்திற்கு செலவாகிறது. MBA படித்தபோது வாங்கிய ரூ. 11 லட்சம் கடனை 7 ஆண்டுகள் கட்டினேன் என்றார்.