வெறும் 15 வயதிலேயே தனது வெறித்தனமான பேட்டிங் திறமையால் உலக அளவில் கவனம் ஈர்த்த இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி தற்போது இந்திய டி20 அணியில் மாஸாக எண்ட்ரி கொடுத்துள்ளது, அணியில் இருக்கும் 3 முன்னணி சீனியர் வீரர்களின் இடத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில்  செம பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது அவர் இருக்கும் வேற லெவல் ஃபார்மிற்கு அவரை நீண்ட காலம் பெஞ்ச்சில் உட்கார வைக்க முடியாது என்பதால், அணியில் இருக்கும் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய 3 வீரர்களின் பிளேயிங் 11 வாய்ப்பு தற்போது கத்தி மேல் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

2026 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றிருந்தாலும், தற்போது ஃபார்ம் அவுட்டில் இருக்கும் சஞ்சு சாம்சன் அல்லது கடந்த உலகக்கோப்பையில் சுமாராக விளையாடிய அபிஷேக் சர்மா ஆகியோர் இந்தத் தொடர்களில் சொதப்பினால், அவர்களுக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி நேரடியாகப் பிளேயிங் 11-க்குள் கொண்டு வரப்படலாம்.

அதேபோல், இந்த ஆண்டு இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருக்கும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஒருவேளை அயர்லாந்து தொடரில் சரியாக விளையாடாவிட்டால், சஞ்சு சாம்சனை 3-வது இடத்திற்கு அனுப்பிவிட்டு, வைபவ் சூர்யவன்ஷியை இஷானுக்குப் பதிலாக ஓப்பனிங் களமிறக்க டீம் மேனேஜ்மென்ட் அதிரடி பிளான் போட்டுள்ளதாக இந்த நியூஸ் கார்டு தற்போது சோசியல் மீடியாவில் கிரிக்கெட் ரசிகர்களால் காட்டுத்தீயாய் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.