வாஷிம் பகுதியில் நேரிட்ட விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, சாலையில் சிதறிக் கிடந்த மாம்பழங்களை மக்கள் போட்டிப்போட்டுத் திருடிச் சென்ற சம்பவம் மனிதாபிமானம் எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் விபத்தில் ஓட்டுநர் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும், அங்கிருந்த மக்கள் அவருக்கு முதலுதவி செய்ய முன்வரவில்லை. மாறாக, லாரியில் இருந்து கீழே விழுந்து கிடந்த மாம்பழங்களைச் சேகரிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

“>

 

இதனால் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மக்கள் பைகள் மற்றும் கூடைகளுடன் வந்து மாம்பழங்களை அள்ளிச் செல்வதைக் காண முடிகிறது. “மனிதாபிமானம் இறந்துவிட்டதா?” என்று பலரும் இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒருபுறம் விபத்தில் சிக்கியவர்களின் கதறல் சத்தம் கேட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் லாரியைச் சூழ்ந்து கொண்டு கொள்ளையடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நவீன சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருவதையும், பிறருடைய துயரத்தை விட சுயநலமே மேலோங்கி இருப்பதையும் வேதனையுடன் வெளிப்படுத்துகிறது.