டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்ட களத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காவல் காவலர் ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்து, தனது காவல் பேட்ஜை சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஷேர் சிங் என்ற அந்த காவலர், டெல்லி ஜந்தர் மந்தரில் திரண்டிருந்த செய்தியாளர்கள் மத்தியில் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். தனது தோளிலிருந்த காவல் துறையின் பேட்ஜைக் கழற்றி, போராட்டக் களத்திலிருந்த அபிஜீத் தீப்கேவிடம் ஒப்படைத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/Sachingupta/status/2080581281201672294?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2080581281201672294%7Ctwgr%5Ebf000f0368a78f1bd047c45d6454901c67ddcfd2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fvideo-uttarakhand-cop-quits-service-hands-police-badge-to-cjp-founder-abhijeet-dipke-at-delhi-jantar-mantar

 

செய்தியாளர்களிடம் பேசிய ஷேர் சிங், “நாட்டின் அமைதியையும் நீதியையும் காக்க வேண்டிய இடத்தில் இருக்கும் காவலர்களின் நிலையைக் சுட்டிக்காட்டி,” அரசுப் பணியிலிருந்து வெளியேறும் தனது முடிவை நியாயப்படுத்தினார். மேலும், தங்களைப் போல இன்னும் பல காவல் துறையினரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அவர் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தரில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், சீருடையில் இருந்த காவலர் ஒருவரே மேடையில் ஏறி தனது பதவியை துறந்த சம்பவம், காவல் துறை வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.