மாணவர்கள் சார்பாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பேச வந்த நடிகை சனம் ஷெட்டி, அங்கிருந்து மிகுந்த கோபத்துடன் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போராட்ட அமைப்பாளர்களுக்கு எதிராகத் தனது ஆவேசமான கருத்துக்களைப் பதிவு செய்தார்.

​பேட்டியின் போது காரசாரமாகப் பேசிய அவர், “நீங்கள் சொல்லிதான் நான் பேச வேண்டுமா? நான் என்ன உங்களுடைய பப்பட்டா (Puppet)? மாணவர்களுக்கான போராட்டம் என்று கூறி என்னை அழைத்தார்கள். மாணவர்களுக்காகப் பேசினால் போதும் என்றுதான் கூப்பிட்டார்கள், அதைத்தான் நான் அங்குச் செய்தேன். ஆனால், கூப்பிட்டு வைத்துவிட்டு, ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு வந்த என்னை ஜோக்கர் என்று சொல்கிறார்கள்” என வேதனை தெரிவித்தார்.

​தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒரு படம் பார்த்தால் நான் ஜோக்கரா? வெற்றிமாறன் சார் இருக்கிறாரே, அவர் எத்தனை படங்களை எடுத்திருக்கிறார்; அப்படியானால் அவரையும் சேர்த்து ஜோக்கர் என்று சொல்வீர்களா? ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம் என்று சொல்கிறார்கள், ஆனால் நான் பேசிக்கொண்டிருக்கும் போதே மைக்கைப் பிடுங்குகிறார்கள். இதுதான் இவர்கள் பேசும் ஜனநாயகத்தின் லட்சணமா?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

​”நான் இங்குப் பொதுமக்களில் ஒருவராக மாணவர்களை சப்போர்ட் செய்வதற்காக மட்டுமே வந்தேன். இந்த மேடையை அரசியல் அஜெண்டாவிற்குப் பயன்படுத்தும் யாருக்கும் என்னால் சப்போர்ட் பண்ண முடியாது. 100 பேர் இருங்கள் அல்லது 1000 பேர் இருங்கள், மைக்கைப் பிடுங்கி என்னை அங்கிருந்து துரத்தியிருக்கிறார்கள். இதிலிருந்தே புரிகிறது இவர்களின் ஜனநாயக லட்சணம்.

<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”en” dir=”ltr”>Salute to the GUTS 🫡🫡🫡 <a href=”https://t.co/kGc3C9EvHx”>pic.twitter.com/kGc3C9EvHx</a></p>&mdash; Pokkiri_Victor (@Pokkiri_Victor) <a href=”https://x.com/Pokkiri_Victor/status/2080698099149025323?ref_src=twsrc%5Etfw”>July 24, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

இவர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடவில்லை, ஏதோ ஒரு அஜெண்டாவை வைத்துக்கொண்டுதான் போராடுகிறார்கள். இவர்களின் சதி வலையில் மாணவர்கள் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம்” என எச்சரித்தார். மேலும், “எனக்கு என்ன பேசத் தோன்றும் உரிமை இருக்கிறதோ அதைத்தான் பேசுவேன் என்றுதான் வந்தேன். பேசக்கூடச் சுதந்திரம் கொடுக்காதவர்கள், சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்களாம்! இது முற்றிலும் ஒரு போலியான போராட்டம்.

டெல்லியில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடைய 100 சதவிகித ஆதரவு மாணவர்களுக்கு மட்டுமே உண்டு” என்று சனம் ஷெட்டி மிக ஆவேசமாகத் தெரிவித்தார்.