மும்பை: ICICI வங்கியை தொடர்ந்து, HDFC வங்கியும் மாதாந்திர மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1 முதல் புதிய கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு, நகர்ப்புற சேமிப்பு கணக்குகளின் மினிமம் பேலன்ஸ் ரூ.10,000-லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், ஊரகப் பகுதிகளில் இந்த தொகை ரூ.10,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள மற்றும் BSEDA கணக்குகளுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. பழைய வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் இல்லையெனவும் வங்கி தெரிவித்துள்ளது.