இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு புறத்தில் புதர்களும், மற்றொரு புறத்தில் நதியும் இருக்கிறது. இந்நிலையில் ஒரு சிம்பன்சி புதர்களில் இருந்து வெளியே வந்து ஆற்றின் நடுவே நிற்கிறது. இதன் பிறகு ஒருவர் சில வாழைப் பழங்களுடன் சிம்பன்சியை நோக்கி சென்றார்.
View this post on Instagram
குரங்குக்கு ஒரு வாழைப்பழம் கொடுக்கப்பட்டதுடன் அது தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் மிகுந்த அன்புடன் அவரை தழுவியது. இந்த உணர்ச்சிவசமான தருணம் கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை 4 லட்சத்திற்கு அதிகமானோர் விரும்பி உள்ளனர்.
