அமேசான் நிறுவனமானது தற்போது கொடுத்திருக்கும் ஆஃபர் மீண்டுமாக கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் ரூ.1 லட்சம் மதிப்புகொண்ட மொபைல் வெறும் 35 ஆயிரம் ரூபாய்கு இந்த தள்ளுபடியில் கிடைக்கிறது. அதாவது, ரூ.1,09,000 விலையிலான கூகுள் பிக்சல் 6 ப்ரோ 5ஜி போன் அமேசானில் ரூபாய்.35000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

கூகுளின் சமீபத்திய வெளியீடுகளான Google Pixel 7 மற்றும் Pixel 7 Pro போன்றவை மார்க்கெட்டில் மிகவும் காஸ்ட்லியான மொபைல்களில் ஒன்றாக உள்ளது. ப்ரீமியம் அம்சங்கள் மற்றும் அற்புதமான கேமராக்கள் இந்த 2 மொபைல்களுக்குமான ஹைலைட் ஆகும்.