பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்-ன் தாய் நிறுவனமான மெட்டா, Verified பேட்ஜ் பெறுவதற்குரிய கட்டணங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இணைய பயனாளர்களுக்கு மாதத்துக்கு $11.99 மற்றும் iOS இயங்குதளங்களில் மாதத்திற்கு $14.99 என சந்தா துவங்கும். ஆகவே கட்டண பயனர்கள் தங்களது சுயவிவரத்தை அரசாங்க ஐடி வாயிலாக வெரிபைட் செய்துக்கொள்ளலாம்.

இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் முதல் முறையாக இச்சேவை கிடைக்கும். சுயவிவர சரிபார்ப்புடன் Instagram மற்றும் Facebook-க்கான சந்தா தொகுப்பு போலி ஐடி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை சரிப்படுத்த கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.