கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டங்குறிச்சி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேப்பூர் மேம்பாலத்தில் சென்ற போது சென்னைக்கு டயர் ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.