கடலூர் துறைமுகத்திலிருந்து சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார்கள். தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனால் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விசை மற்றும் பைபர் உள்ளிட்ட அனைத்து வகையான மீன்பிடி படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது. மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மீனவர்கள் இந்த அறிவிப்பை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.