கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிக்கும் படம் ‘டாக்சிக்’ இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கரீனா கபூர் தற்போது கால்ஷீட் பிரச்சணை காரணமாக விலகியுள்ளதாகவும் அதற்கு பதில் நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.