1916ஆம் ஆண்டு மைசூரின் ராஜா நால்வடி கிருஷ்ணராஜா வடியார், விற்கப்படாத சந்தன மரங்களைப் பயன்படுத்தி சோப் தயாரிக்கத் தொடங்கினார். அப்போது உருவான மைசூர் சாண்டல் சோப் இன்று வரை பிரபலமாக உள்ளது. இந்த சோப் 100 சதவீதம் தூய சந்தன எண்ணெய் கொண்டது என்று சிறப்பு குறியீட்டைப் பெற்றுள்ளது. கர்நாடகா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனம் தினமும் 10-12 லட்சம் சோப் தயாரிக்கிறது. பல ஆண்டுகள் கடந்தும், இதற்கென்று தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர், ஏனெனில் இது இயற்கை மணமும் தரமும் கொண்டது.

இப்போது சமூக வலைதளங்களில் மைசூர் சாண்டல் சோப் எப்படி தயாரிக்கப்படுகிறது தொழிற்சாலை எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் ஒரு காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது