“டாக்டரம்மா எனக்கு ஒரு ஊசி கூடப் போட மாட்டேங்குறாங்கப்பா, வலியால ரொம்பக் கஷ்டப்படுறேன்!” என்று மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு வந்த மூதாட்டி ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களிடம் நேரில் கண்ணீர் மல்கக் முறையிட்ட சம்பவம் நாமக்கல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், தற்போதைய மருத்துவக் கட்டமைப்பு மற்றும் சிகிச்சைகளின் தரம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த ஏழை எளிய மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு மூதாட்டி அமைச்சரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, தனக்கு அங்குள்ள மருத்துவர்கள் சரிவர ஊசி போடுவது  இல்லை என அழுதுகொண்டே கூறினார்.

அந்தப் பழுத்த மூதாட்டியின் உருக்கமான புகாரைக் கேட்ட அமைச்சர், அங்கிருந்த தலைமை மருத்துவரை உடனடியாக அழைத்துச் சிகிச்சை அளிக்குமாறு கூறினார் , மேலும் அங்குள்ள மருத்துவர்ள் மற்றும் செவிலியர்களிடம்,  நமக்கு முதலாளி மக்கள் தான் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மனம் கோணாமல் 24 மணிநேரமும் உரிய சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

“>