சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கடையில் நடந்த திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. அந்தக் கடையில் இருந்த முதியவர் ஒருவர் மிக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு நபர் மிகவும் நிதானமாக கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பையைத் திருடிக்கொண்டு செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.

அந்த முதியவர் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கும்போதே, அந்தத் திருடன் அங்கிருந்த பையை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறான். மீண்டும் திரும்பி வந்து, அந்தத் தராசை மூடிவிட்டு எந்தச் சந்தேகமும் வராதபடி தப்பிச் செல்கிறான்.

இந்தச் சம்பவம் நடக்கும்போது அந்த முதியவர் எழுந்திருக்கவே இல்லை, இது பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் திருடப்பட்ட பையில் சுமார் 5 கிலோ தங்கம் மற்றும் 12 கிலோ வெள்ளி இருந்ததாகவும், அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வைத்துக்கொண்டு இப்படிப் பொறுப்பற்ற முறையில் தூங்கியதுதான் இவ்வளவு பெரிய திருட்டுக்குக் காரணம் என்று நெட்டிசன்கள் முதியவரின் கவனக்குறைவைச் சாடி வருகின்றனர்.

“>

 

அதேசமயம், கடைக்குள் நடக்கும் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதால், அந்தத் திருடனைப் பிடிப்பது எளிது என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.