கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் எப்போதும் தனது மாநிலத்தின் நலனுக்காகவே பேசுவார் என்றும், அவருக்கு தமிழ்நாட்டின் நலன் முக்கியமல்ல என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாகப் பேசிய அவர், தமிழ்நாட்டின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதே நமக்கு முதன்மையானது என்று அழுத்தமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்குத் தேவையான காவிரி நீர் எப்படியாவது வந்து சேர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது எனக் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், தமிழ்நாடு முதல்வர் விஜய் நேரடியாகக் கர்நாடகா சென்று அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று தான் கருதுவதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களின் விவாசாய மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நீர் வருவது மட்டுமே முக்கியம் என்பதால், மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் இதில் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
