மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரிச் சாலையில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு ப.சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ரூ.2000 நோட்டை அறிமுக நிலையிலேயே மக்கள் புறக்கணித்தார்கள். யார் கையில் ரூ.2000 நோட்டு புழக்கத்தில் உள்ளது என்றால் பெரிய நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் போன்றவற்றில் தான். விரைவில் ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வந்தாலும் நான் வியப்படையமாட்டேன்” என்றார்.