தென்காசி மாவட்டம் கோவிந்தபேரியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மற்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் திமுகவில் இணைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் முன்னிலையில் இந்த இணைவு விழா நடைபெற்றது. சமீபத்தில் தான் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வந்த வேகத்திலேயே தனது ஆதரவாளர்களையும் ஆளுங்கட்சிக்கு இழுத்து அரசியல் களத்தை அதிர வைத்துள்ளார்.

​இந்த நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் பாண்டியன், மற்ற கட்சிகளில் அதிருப்தியில் இருப்பவர்களை இன்னும் பெரிய அளவில் திமுகவில் இணைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தென் மாவட்டங்களில் இப்படி மொத்தமாக ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்திருப்பது, அதிமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.