தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வர இன்னும் சில மாதங்களே இருப்பதால், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (ஜனவரி 4) வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அதிமுக வட்டத் துணைச் செயலாளர் கதிரேசன், தனது ஆதரவாளர்கள் சுமார் 50 பேருடன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் அவர்கள் அனைவரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த கதிரேசன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக நிர்வாகி ஒருவரே ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
