மதுரையில் மார்ச் 1-ம் தேதி நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, வரும் தேர்தலில் என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், திமுக சொல்லும் வளர்ச்சி குறித்த தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
