பாகிஸ்தானில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க நவீன கருவிகளுக்குப் பதிலாக வாளிகளில் தண்ணீரை ஊற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கேலியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு குடியிருப்பு பகுதியில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டபோது, உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வாகனத்தில் தீயை அணைக்கத் தேவையான குழாய்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி தீயணைப்பு வீரர்கள் வாளிகளில் தண்ணீரை நிரப்பி நெருப்பின் மீது வீசியுள்ளனர்.
<a href=”http://
When a fire broke out in Pakistan, locals called the fire brigade.
But the firefighters had no proper equipment – they were trying to put out the flames by filling water in buckets and throwing it on the fire.
Pakistan has truly become a joke now. pic.twitter.com/IKH1YUQCFk
— Saffron Chargers (@SaffronChargers) January 24, 2026
“>
இந்த விசித்திரமான காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
அந்த வீடியோவில் ஒருவர், “பாருங்கள், நம் நாட்டின் தீயணைப்புத் துறை எவ்வளவு சிறப்பாகத் தயாராக இருக்கிறது” என்று கிண்டலாகக் கூறுவதுடன், அரசின் அலட்சியத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தத் தீ விபத்து பாகிஸ்தானின் எந்தப் பகுதியில், எப்போது நடந்தது என்ற துல்லியமான தகவல் தெரியவில்லை என்றாலும், அந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
சமூக வலைதளப் பயனர்கள் பலரும் பாகிஸ்தான் அரசின் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“2026-ம் ஆண்டிலும் வாளிகளால் தீயை அணைப்பது வேதனையாக இருக்கிறது” என்றும், தீயணைப்பு வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து முறையான கருவிகள் இல்லாமல் அவர்களைப் பணிக்கு அனுப்புவது கண்டிக்கத்தக்கது என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசு நிர்வாகத்தின் தோல்வியையே இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
