மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு வருகிற 20-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. குறிப்பாக பெண்களை குறி வைத்து வாக்குகள் கவர்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுவதாக தெரிகிறது.
அதாவது மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு மாதந்தோறும் 2,100 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் இன்னும் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் முதல்முறையாக மகளிர் உரிமை தொகையை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய நிலையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
