மத்தியப் பிரதேசத்தில் உள்ள நாக்டா ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் எண் 1-ல் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை காவலர் மான்சிங் என்பவர் கன்னத்தில் அறைந்தும், காலணியால் தாக்கியும் துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அருகில் சென்ற ரயில் ஏசி கோச்சில் இருந்த பயணி ஒருவர் இதை வீடியோ எடுத்துப் பதிவிட்டதால், இந்தச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

இந்த வீடியோ வெளியானதை அடுத்து, ரயில்வே போலீசாரின் நற்பெயர் கெடுவதைத் தடுக்கவும், கடமையில் அலட்சியம் மற்றும் ஒழுங்கீனத்தைக் கருத்தில் கொண்டும், GRP SP ரயில் ஸ்ரீ சுக்லா உடனடியாக தலைமை காவலர் மான்சிங்கை சஸ்பெண்ட் செய்து இந்தூர் ரயில்வே லைன் போலீசுக்கு அனுப்பி வைத்தார். நாக்டா கவுன்சிலர் பிரகாஷ் ஜெயின் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.