சிறு குழந்தைகள் பொதுவாக எதைப் பார்த்தாலும் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து விளையாடத் தொடங்குவார்கள். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறுவன் ஒரு பாம்பாட்டியிடம் இருக்கும் பாம்பைக் கேட்டு அடம் பிடிக்கும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு கடையின் வாசலில் அமர்ந்திருக்கும் பாம்பாட்டியின் பெட்டிக்குள் இருக்கும் பாம்பை அந்தச் சிறுவன் கைகளால் பிடிக்க முயல்கிறான். பாம்பாட்டி எவ்வளவோ தடுத்தும் கேட்காத அந்தச் சிறுவன், பாம்பைத் தனக்குத் தரும்படி விடாப்பிடியாக அடம்பிடிக்கிறான்.
சிறுவனின் பிடிவாதத்திற்குப் பணிந்த பாம்பாட்டி, ஒருகட்டத்தில் பாம்பை அவன் கையில் கொடுக்கிறார். அந்த நச்சுப் பாம்பைச் சற்றும் பயமின்றி வாங்கிய சிறுவன், அதைத் தொட்டு விளையாடிவிட்டுத் திரும்பக் கொடுக்கிறான்.
பாம்பாட்டி கிளம்பும்போது மீண்டும் அந்தப் பாம்பிற்காகச் சிறுவன் அழத் தொடங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
“>
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “குழந்தைகள் கடவுளுக்குச் சமமானவர்கள், அவர்களுக்குப் பாம்பு, தேள் என்ற பாகுபாடு தெரியாது, எல்லாம் அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள்தான்” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
