சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வேடிக்கையான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு பூனைக்கும் புறாவிற்கும் இடையிலான மோதல் குறித்த வீடியோ இணையதளவாசிகளைப் சிரிக்க வைத்துள்ளது.
ஒரு பூனை நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு புறா, அந்த பூனை இறந்துவிட்டது அல்லது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது என்று நினைத்து அதன் அருகில் செல்கிறது. ஒருகட்டத்தில் பயமே இல்லாமல் பூனையின் தலை மீதே ஏறி நின்று கொண்டு அந்தப் புறா சேட்டைகளைச் செய்யத் தொடங்கியது.
ஆனால், புறாவின் இந்த ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திடீரென பூனை கண் விழித்ததும் அதிர்ச்சியடைந்த புறா அங்கிருந்து தப்பிக்க முயன்றது. அப்போது அந்தப் பூனை சற்றும் யோசிக்காமல் புறாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது.
வந்து என்னை அடி என்ற பழமொழிக்கு ஏற்ப, தானாகச் சென்று சிக்கிய புறாவின் இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வருகிறது.
View this post on Instagram
“>
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அந்தப் புறா பூனை செத்துவிட்டது என்று நினைத்து அதன் மீது உரிமை கொண்டாடப் பார்த்தது, ஆனால் கடைசியில் அதற்குப் பலத்த அடி கிடைத்துவிட்டது” என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
