சமூக வலைதளங்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அந்த வகையில் ஒரு யானை மற்றும் புத்தத் துறவிகளுக்கு இடையேயான அழகான பிணைப்பை இந்த வீடியோ காட்டுகிறது:

சாலையில் புத்தத் துறவிகள் சிலர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு யானை, அவர்களைக் கடந்து போகாமல் அப்படியே வழிமறித்து நின்றது.

துறவிகள் கையில் உணவுப் பாத்திரங்கள் இருப்பதைப் பார்த்த யானை, தனது தும்பிக்கையை நீட்டி உணவைக் கேட்டது. இதைப் பார்த்து மிரண்டு போகாத துறவிகள், தங்களின் பாத்திரத்தில் இருந்த உணவை அந்த யானைக்குப் பாசத்துடன் ஊட்டினார்கள்.

கேட்ட உணவு கிடைத்ததும், அந்த யானை எந்தத் தொந்தரவும் செய்யாமல் அமைதியாக வழிவிட்டது. துறவிகளும் புன்னகையோடு அந்த இடத்தைக் கடந்து சென்றனர்.