சமூக வலைதளங்களில் ஒரு கார் டிரைவரின் அராஜகம் மற்றும் அதன் விளைவு குறித்த வீடியோ தீயாய் பரவி வருகிறது. பார்க்கிங் பகுதியில் ஸ்கூட்டியில் வந்த ஒரு நபர், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கும் போது, எதிரே வந்த ஒரு கார் டிரைவர் வேண்டுமென்றே அவர் மீது காரை மோதினார். அந்த ஸ்கூட்டி நபர் நூலிழையில் உயிர் தப்பினார்.
மோதிவிட்டு நிற்காமல் தப்ப முயன்ற அந்த கார் டிரைவர், காரை வேகமாக பின்னோக்கி (Reverse) எடுத்தார். அப்போது நிலைதடுமாறிய கார், அங்கிருந்த டிவைடர் (தடுப்புச் சுவர்) மீது ஏறி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அடுத்தவருக்குத் தீமை செய்ய நினைத்த அந்த டிரைவர், தனது விலை உயர்ந்த காரை நொறுக்கி தனக்குத்தானே பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
