உலகிலேயே மிகவும் அபாயகரமான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படும் ராஜநாகத்தின் ஆக்ரோஷமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகப் பாம்பைக் கண்டாலே மக்கள் அலறியடித்து ஓடும் நிலையில், ஒரு நபர் அசால்ட்டாக அந்த ராஜநாகத்தின் கழுத்தைப் பிடித்து அதன் விஷத்தைக் கறக்கும் காட்சி பார்ப்பவர்களைக் கதிகலங்க வைக்கிறது. அந்த நபர் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை ராஜநாகத்தின் வாயில் வைக்க, அது கோபத்துடன் கடித்தபடி தனது விஷத்தைக் கக்குகிறது. இந்த வீடியோ ‘நேச்சர் சாப்டர்’ என்ற எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Nature’s deadliest liquid! 💀 The shocking scene of King Cobra venom extraction pic.twitter.com/MBWaUF2KON
— Nature Chapter (@NatureChapter) February 8, 2026
இந்தக் கொடூரமான காட்சியைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். “ஏன் இப்படி உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான காரியங்களைச் செய்கிறீர்கள்?” என்றும், “வனவிலங்குகளுடன் இது போன்ற விபரீத விளையாட்டுகளை ஒருபோதும் செய்யக்கூடாது” என்றும் மக்கள் எச்சரித்து வருகின்றனர். வெறும் 21 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வந்தாலும், அந்த நபரின் துணிச்சலும் அந்த விஷம் வெளியேறும் பயங்கரமான காட்சியும் இணையவாசிகளின் ரத்தத்தை உறைய வைத்துள்ளது.
