ஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ‘பில்லார்டா’ இந்தியாவின் பல நூற்றாண்டு கால பழமையான கிராமிய விளையாட்டான ‘கிட்டிப் புள்ளை’ போன்றே அச்சு அசலாக ஒத்திருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.”

இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், ஸ்பெயின் நாட்டில் விளையாடப்படும் பில்லார்டா போட்டியின் விதிகளும், பயன்படுத்தப்படும் குச்சிகளின் வடிவமும் இந்தியாவில் விளையாடப்படும் கில்லி-தண்டா விளையாட்டைப் போன்றே இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவின் பாரம்பரியக் கலைகளும் விளையாட்டு வடிவங்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உலக அளவில் பரவியுள்ளனவா என்ற வியப்பை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by The Indian Angle (@the.indian.angle)

“>

இந்த உலகளாவிய ஒப்பீடு குறித்த காணொளி சமூக ஊடகப் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், இந்தியா தனது சொந்த பாரம்பரிய விளையாட்டுகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.