சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பகீர் வீடியோ காண்போரை உறைய வைத்துள்ளது. ஒரு பெரிய அடைப்பானுக்குள் சுமார் 15 பசியுள்ள புலிகள் உலாவிக்கொண்டிருப்பதை மேலிருந்து ஏராளமான மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர், திடீரென ஒரு உயிருள்ள ஆட்டைத் தூக்கி புலிகள் இருக்கும் இடத்திற்குள் வீசுகிறார். கீழே விழுந்த அடுத்த நொடியே, அங்கிருந்த அனைத்துப் புலிகளும் மின்னல் வேகத்தில் அந்த ஆட்டின் மீது பாய்ந்து வேட்டையாடுகின்றன.
கண் இமைக்கும் நேரத்தில் ஆடு இருந்த இடமே தெரியாமல் போனது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கொடூரமான காட்சி பார்ப்பதற்கு ஏதோ ஒரு சினிமா படம் போலத் தோன்றினாலும், இது நிஜமாகவே நடந்த ஒரு சம்பவம் என்பது தான் அச்சத்தை கூட்டுகிறது.
பசியோடு இருக்கும் வேட்டை விலங்குகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதையும், அவற்றின் வேகம் எவ்வளவு கொடூரமானது என்பதையும் இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது.
View this post on Instagram
“>
இணையத்தில் இதைப் பார்த்த ஆயிரக்கணக்கான பயனர்கள், அந்த ஆட்டை எறிந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த வீடியோ தங்களை வெகுவாக நிலைகுலையச் செய்துவிட்டதாகக் கூறி வருகின்றனர்.
