மும்பையின் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜவஹர்லால் ஜாவேரி, தனது குடும்ப வறுமையைப் போக்க சிறிய வயதிலேயே தொழிலில் இறங்கினார். 1980-களில் பெரும்பாலான வீடுகளில் மசாலாக்களைத் தயாரித்து வந்த நிலையில், தரமான மசாலாக்களை பாக்கெட்டுகளில் விற்கும் யோசனையை இவர் கையில் எடுத்தார்.
ஆரம்பத்தில் ஒரு சிறிய அறையில் மசாலாக்களை அரைத்து, பாக்கெட் செய்து, மும்பையின் குறுகிய சந்துகளில் சைக்கிளில் சென்று வீடு வீடாக விற்பனை செய்தார்.
ஆரம்பத்தில் பலரும் இவரைக் கிண்டல் செய்தாலும், தரத்தில் துளிக்கூட சமரசம் செய்யாமல் உழைத்ததால் மக்கள் மத்தியில் இவருடைய ‘பாட்ஷா மசாலா’ பிரபலம் அடைந்தது.
1990-களில் மசாலா சந்தை விரிவடைந்தபோது, MDH மற்றும் எவரெஸ்ட் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களுக்குச் சமமாகப் போட்டியிட்டார்.
இன்று 100-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுடன், ஆண்டுக்கு சுமார் ₹181 கோடி வருவாய் ஈட்டும் அளவுக்குப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது இந்த நிறுவனம். தற்போது இவரது மகன் ஹேமந்த் ஜாவேரி இந்தத் தொழிலை வழிநடத்தி வருகிறார்.
