உலகிலேயே மிகவும் புனிதமான உறவு அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி உறவுதான். அடித்துக் கொண்டாலும் ஆபத்து என்று வரும்போது ஒருவருக்காக ஒருவர் உயிரையும் கொடுப்பார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்று.
எக்ஸ் (Twitter) தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு சுற்றுலாத் தலத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் சீறிப்பாய்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறான்.
बहादुर बहन ने अपने छोटे भाई को डूबने से बचाने के लिए अपनी जान जोखिम में डाल दी।
एक बहन का प्यार और उसकी हिम्मत की कोई सीमा नहीं होती।
इस बच्ची ने अपनी जान की परवाह किए बिना अपने छोटे भाई को मौत के मुँह से बाहर निकाल लिया। pic.twitter.com/DQnK4m5Fdi
— Shagufta khan (@Digital_khan01) January 25, 2026
அவன் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட அவனது அக்கா, ஒரு நொடி கூட யோசிக்காமல் வெள்ளத்தில் குதித்து அவனைத் தப்பவிடாமல் இறுகப் பற்றிக்கொண்டார்.
பாறைகளுக்கு இடையே தண்ணீர் ஆக்ரோஷமாகப் பாய்ந்தாலும், தம்பியின் கை நழுவிவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்த மற்ற சுற்றுலாப் பயணிகளும் ஓடி வந்து இருவரையும் பத்திரமாக மீட்டனர். “தம்பிதான் என் உயிர்” என அந்த அக்கா காட்டிய வீரம் இப்போது இணையத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
