காட்டுப் பகுதியில் கார் ஒன்றில் சென்ற நபர், ஒரு நரி பறவை ஒன்றை வேட்டையாடித் தனது வாயில் கவ்விக்கொண்டு சாலையைக் கடப்பதைப் பார்த்துள்ளார்.

அந்தப் பயங்கரமான காட்சியை வீடியோ எடுக்க நினைத்த அவர், காரை நிறுத்தி திடீரென ‘ஹார்ன்’ (Harn) அடித்துள்ளார். அந்தச் சத்தத்தில் மிரண்டு போன நரியின் பிடி தளர்ந்ததும், அதன் வாயில் இருந்த பறவை சட்டெனப் பறந்து தப்பியது.

கஷ்டப்பட்டுப் பிடித்த இரை கையை விட்டுப் போனதால் கடுப்பான நரி, அந்த ஆத்திரத்தில் நேராகக் காரின் முன் பகுதிக்கு (Bonnet) வந்து ஓட்டுநரை நோக்கிப் பாய்ந்து அட்டாக் செய்தது.

கார் கண்ணாடி இருந்ததால் ஓட்டுநர் காயமின்றித் தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “விலங்குகளின் உணவு தேடும் உரிமையில் மனிதர்கள் தலையிடக் கூடாது” என நெட்டிசன்கள் அந்த கார் ஓட்டுநரைச் சாடி வருகின்றனர்.