மரணத்துடன் விளையாடிய இளைஞர் ஒருவர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சுமார் 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் உயர்மின்னழுத்த மின் கம்பத்தின் உச்சிப்பகுதியில் ஒருவர் எந்தவித அச்சமும் இன்றி அமைதியாக அமர்ந்திருப்பது காணப்படுகிறது.

அதோடு கீழே நின்ற பொதுமக்கள் அதிர்ச்சியுடன் காட்சியை பதிவு செய்த நிலையில், ஒரு தவறான அசைவும் உயிருக்கு ஆபத்தாக மாறியிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

இதனால் சிலர் இதை மனநலப் பிரச்சினையால் ஏற்பட்ட செயல் என கூற, மற்றவர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக இளைஞர் இப்படியான ஆபத்தான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர். எதுவாயினும், உயர்மின்னழுத்த மின் கம்பங்களில் ஏறுவது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற செயல்களை யாரும் பின்பற்றக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.