அஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு மேம்பாலத்தின் நடுவே, போக்குவரத்து விதிகளைப் பொருட்படுத்தாமல் தனது மனைவிக்காக ரெட் கார்பெட் விரித்துப் பிரம்மாண்டமாகப் பிறந்தநாள் கொண்டாடிய தொழிலதிபர் கௌதம் பருவா என்பவரைப் பரலுமுக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்த விழாவின் போது மேம்பாலத்தின் சாலையை மறித்துக் கொண்டாட்டங்கள் அரங்கேறியதால், அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தல் உருவானது.
இது தொடர்பானவீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களின் கடுமையான கண்டனங்களைப் பெற்ற நிலையில், இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து கௌதம் பருவாவைக் கைது செய்துள்ளனர்.
Businessman Gautam Baruah was detained by Bharalumukh Police on Monday after a video showing a birthday celebration atop the Kumar Bhaskar Varma Flyover in Guwahati went viral on social media.
According to police officials, Baruah was summoned for questioning in connection with… pic.twitter.com/TSRHU8nZ2t
— Hate Detector 🔍 (@HateDetectors) June 23, 2026
“>
பொது உள்கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது போன்ற பிரிவுகளின் கீழ் தற்பொழுது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
