பள்ளியில் ஆசிரியர் அல்லது முதல்வர் திட்டிவிட்டால் அழுதுகொண்டே பெற்றோரிடம் புகார் அளிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், பீகாரைச் சேர்ந்த ஒரு சுட்டிப் பையன் தன்னைத் திட்டிய பள்ளி முதல்வருக்கே நேருக்கு நேராக மாஸ் வார்னிங் கொடுத்துள்ள கியூட்டான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில், பள்ளி முதல்வர் தன்னைத் திட்டியதால் கடும் ஆத்திரமடைந்த அந்தச் சிறுவன், தனது மழலை மாறாத குரலில், “உன் நாள்கள் எண்ணப்படுகின்றன! இன்னும் சில நாள்களில் இந்த ஸ்கூலையே நான் தரைமட்டமாக்கி அழித்துவிடுவேன்” என்று மிக ஆக்ரோஷமாகச் சைகை காட்டி வார்னிங் கொடுக்கிறான்.
கோபத்தில் அந்தப் பிள்ளை கத்திய போதிலும், அதில் வெளிப்பட்ட அசல் மழலைத் தனமும், கள்ளமில்லாத வெள்ளந்தித் தனமும் நெட்டிசன்களை ஒட்டுமொத்தமாகச் சிரிக்க வைத்துள்ளது.
“Count your days! I’ll destroy the school!” 😂
Bihar kid warning principal after getting scolded. Pure innocence and cute anger in this viral video! 🏫👶 pic.twitter.com/2XSQyEaZFi
— AVM (@AvmNews7) June 23, 2026
“>
“டிஜிட்டல் காலத்து குழந்தைகள் தற்பொழுது நெக்ஸ்ட் லெவலுக்குச் சென்றுவிட்டார்கள்” என்றும், “இவன் தான் ஃபியூச்சர் கேங்ஸ்டர்” என்றும் இந்த வைரல் வீடியோவிற்கு இணையவாசிகள் பலரும் தங்களது கியூட்டான கமெண்ட்டுகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
