எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளியில், சாலையில் எந்தத் தொந்தரவும் செய்யாமல் அமைதியாகச் சென்று கொண்டிருந்த ஒரு நாயை, ஒரு நபர் திடீரெனத் தூக்கி ஆக்ரோஷமாகத் தரையில் வீசுகிறார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த ஒருவருக்கு ரத்தம் கொதித்துப் போய்விட்டது.
He Tried to Mess with the Dog… Karma Stepped In Instantly. pic.twitter.com/4xdwITONjn
— Best Clips (@best_clips__) January 25, 2026
ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல், அந்த நபர் ஓடி வந்து நாயைத் தூக்கி எறிந்தவரைத் தடுத்து நிறுத்துகிறார். அங்கிருந்த ஒரு கம்பை வாங்கி, அந்த அராஜகம் செய்த நபரின் முட்டுக்குக் கீழ் ‘சுளீர் சுளீர்’ என அடி வெளுத்து வாங்குகிறார். “பாவம் அந்த நாய் என்ன செஞ்சது?” என அந்த நபர் கொடுத்த ‘தர்ம அடி’ இப்போ இன்டர்நெட்டையே அதிர வைத்துள்ளது.
