சமூக ஊடகங்களில் புகழையும், சில ஆயிரம் வியூஸ்களையும் பெறுவதற்காக அதீத ஆர்வத்தில் ஆபத்தான செயல்களில் ஈடுபடும் ரீல்ஸ் மோகத்திற்குப் பலியாகி, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டிராக்டரை மலையிலிருந்து கீழே உருட்டி விட்ட இளைஞரின் வீடியோ தற்பொழுது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்த வீடியோவில், மலைச் சரிவு ஒன்றில் டிராக்டரை ஓட்டி வரும் நபர், சினிமா பாணியில் ஓடும் வண்டியிலிருந்து பாதியிலேயே இறங்கி மாஸாக ரீல்ஸ் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், அவர் கீழே இறங்கிய அடுத்த கணமே நிலைமை தலைகீழாக மாறி, வேகம் எடுத்த டிராக்டர் நேராகச் செங்குத்தான பாறையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிப் சாம்பலானது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், சுமார் ₹4 முதல் ₹6 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் முற்றிலும் சேதமடைந்து பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
Breaking News 🚨
अपने मालिक के रील बनाने के कीड़े से परेशान होकर ट्रैक्टर ने की आत्महत्या 😂 pic.twitter.com/p5kDV8TxrH
— Rashpinder Brar (@RashpinderBrar3) June 23, 2026
“>
தற்பொழுது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் பலரும், “மிகுந்த துக்கத்திலும் எனக்குச் சிரிப்பு தான் வருது” என்றும், “வியூஸ் ஆசையில் பாவப்பட்ட டிராக்டரின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டாரே” என்றும் அந்த இளைஞரைத் தங்களது கமெண்ட்டுகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.
