உத்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியிடம் கொடூரமாக நடந்துகொண்ட குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த விசாரணையில் போலீஸ் மோப்ப நாய் ‘மேரி’ முக்கிய பங்காற்றியது.
அதோடு சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்களை மோப்பம் பிடித்த மேரி, போலீசாரை சந்தேக நபர் இருந்த இடத்துக்கு வழிநடத்த உதவியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர்.
यूपी के संभल में 6 साल की मासूम से दरिंदगी करने वाले आरोपी को डॉग ‘मैरी’ ने ढूंढ निकाला
संभल SP के.के. बिश्नोई ने डॉग मालिक को 10000रु का चेक सौंपा..!!🫡 pic.twitter.com/rQlSwCFLts
— Nehra Ji (@nehraji778) June 23, 2026
“>
இந்த சிறப்பான சேவையை பாராட்டும் விதமாக சம்பல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP மேரியின் உரிமையாளருக்கு ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை வழங்கி கவுரவித்தார். குற்றவாளியை பிடிக்க மோப்ப நாய் மேரி அளித்த உதவி காவல்துறையினரிடமும், பொதுமக்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் குற்ற விசாரணைகளில் மோப்ப நாய்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த சம்பவம் நமக்கு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
