இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையே சீரழித்து வரும் போதைப்பொருள் நடமாட்டத்தை தென்னிந்தியாவில் இருந்து வேரோடு ஒழிக்க #OperationToofan என்ற அதிரடி திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே மிக சாதுரியமாகச் செயல்பட்டு வரும் இந்த போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை முழுமையாக உடைக்க வேண்டும் என்றால், அண்டை மாநிலங்களின் கூட்டு நடவடிக்கை மிக மிக அவசியம்.

இதைக் கருத்தில் கொண்டு, எல்லையோர போதைப்பொருள் கடத்தலை ஒடுக்க தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் ஒன்றிணைந்து கூட்டுச் செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் வி.டி. சதீசன், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ​”நம் வீட்டுப் பிள்ளைகளின் வாழ்க்கை இந்த நச்சுப் பிடியில் சிக்கி வீணாவதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது” என்ற எமோஷனலான நோக்கத்தோடு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கூண்டோடு பிடிக்க தென்னிந்திய மாநிலங்களின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று அதில் முன்மொழியப்பட்டுள்ளது. கேரளா விடுத்துள்ள இந்த அதிரடி அழைப்பை ஏற்று, போதை அரக்கனுக்கு முற்றுப்புள்ளி வைக்க  தமிழக அரசு எவ்வாறு பதிலளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது