கடலின் ஆழத்தில் வாழும் சில மீன் இனங்கள் இயற்கையின் விசித்திரமான அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது “ஹாக்ஃபிஷ்” மற்றும் சில ரீஃப் மீன் இனங்கள். இம்மீன்கள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பெண் மீன்களாக இருந்து பல ஆண்டுகள் முட்டைகள் இடுகின்றன.

மேலும் சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் வரை இனப்பெருக்கத்தில் பெண்ணாக செயல்பட்ட பிறகு, உடலின் ஹார்மோன் மாற்றங்களால் ஆண் மீன்களாக மாறும் திறன் இவைகளுக்கு உள்ளது. இந்த அரிய நிகழ்வு விஞ்ஞான உலகில் என அழைக்கப்படுகிறது.

இதனால் ஆண் மீன்களாக மாறிய பின்னர், அவை அதே கூட்டத்தில் உள்ள பெண் மீன்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில நேரங்களில் முன்பு ஒன்றாக வளர்ந்த சகோதரி மீன்களுடன்கூட இணை சேரும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் மனிதர்களுக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், இவ்வாறு பாலினத்தை மாற்றிக்கொள்வது அந்த இனத்தின் எண்ணிக்கையை நிலைநிறுத்தவும், இனப்பெருக்க வெற்றியை அதிகரிக்கவும் இயற்கை உருவாக்கிய பரிணாமத் தந்திரமாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். கடல் உயிரினங்களின் இந்த அபூர்வ தன்மை ஆய்வாளர்களை தொடர்ந்து ஆச்சரியப்படுத்தி வருகிறது.