போக்குவரத்து விதிமீறல்களால் நிலுவையில் இருந்த இ-சலான்களுக்கு 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்ற தகவலை அறிந்த ஒருவர், தனது அபராதத் தொகையை செலுத்த காவல் நிலையத்துக்கு சென்றார். ஆனால் அங்கு அவருக்குக் கிடைத்த அதிர்ச்சி அளவிட முடியாதது.

மேலும் அவரது வாகனத்தின் பெயரில் ஒரே ஒரு அபராதம் அல்ல, மொத்தம் 100 இ-சலான்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், செலுத்த வேண்டிய மொத்த அபராதத் தொகை ரூ.27,500 என தெரியவந்தது. தள்ளுபடி கிடைத்தாலும் செலுத்த வேண்டிய தொகை கணிசமாக இருந்ததால் அந்த நபர் அதிர்ச்சியடைந்தார். காவல்துறையினர் வழங்கிய நீண்ட ரசீது தரையைத் தொடும் அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறியதன் விளைவாக இவ்வளவு அதிகமான சலான்கள் குவிந்துள்ளன என்றும், வாகன ஓட்டிகள் தங்களது இ-சலான் நிலையை அவ்வப்போது சரிபார்த்து அபராதங்களை உடனுக்குடன் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.