உத்தரப்பிரதேசத்தின் பரேலி நகரில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து தூய்மை பணியாளர் நகராட்சி சுகாதார அதிகாரிக்கு வளையல் அணிவித்து எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி சுகாதார அதிகாரி பானுபிரகாஷை நேரில் சந்தித்த தொழிலாளர்களில் ஒருவர், அவரது முகத்திலேயே வளையலை வீசி, “இதை அணிந்து கொள்ளுங்கள்” என்று ஆவேசமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு சில நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
थोड़ी चूड़ियां पहन लो, एक लंहगा सिलवा लो!
UP- बरेली के नगर स्वास्थ्य अधिकारी भानुप्रकाश के मुंह पर एक सफाईकर्मी ने चूड़ियां फैंककर दे मारी. कहा- “ले इन्हें पहन ले.”
सफाईकर्मियों को आउससोर्स कंपनी ने 13 हजार रूपये/माह में हायर किया था. खून-पसीना बहाने के बाद सिर्फ 7500 रूपये/माह… pic.twitter.com/D2DtlQAaVI
— Narendra Pratap (@hindipatrakar) June 23, 2026
“>
இது குறித்து, தூய்மை பணியாளர் கூறுகையில், அவுட்சோர்சிங் நிறுவனம் மூலம் மாதம் ரூ.13,000 ஊதியத்தில் பணியில் அமர்த்தப்பட்டாலும், கடுமையாக உழைத்த பிறகும் தங்களுக்கு வெறும் ரூ.7,500 மட்டுமே வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
அதோடு மீதமுள்ள தொகை எங்கே செல்கிறது என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். நகராட்சி சுகாதார அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஊழலே இதற்குக் காரணம் என தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
