புனே நகருக்கு அருகிலுள்ள லோஹாகர் கோட்டைக்கு சுற்றுலா சென்ற தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவரின் மர்ம மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவந்துள்ளன.
மேலும் 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்தும் கோடைகாலத்தில், ஒரு நபர் தனது முகத்தையும் உடலையும் மறைக்கும்படி குளிர்கால ‘ஹூடி’ ஆடையை அணிந்து கொண்டு, கேதன் மற்றும் அவரது காதலி சியா கோயல் ஆகியோரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இந்த விசித்திரமான மற்றும் சந்தேகத்திற்கிடமான நபரின் நடமாட்டம் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், கேதன் அகர்வால் தற்செயலாக இறக்கவில்லை, அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து அந்த வெயிலிலும் சந்தேகப்படும்படி ஹூடி அணிந்திருந்த நபரின் அடையாளத்தை வைத்து துப்பு துலக்கியதன் மூலம், இந்த மர்மக் கொலை வழக்கின் முழு முடிச்சுகளையும் போலீசார் அவிழ்த்துள்ளனர்.
