கோடிக்கணக்கான மக்களின் புனித நதியாகப் போற்றப்படும் வாரணாசி கங்கையின் நடுவே, படகில் சென்ற ஒரு கும்பல் அசைவ உணவு சமைத்து, பீர் குடித்து ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது. “மத உணர்வுகளைப் புண்படுத்தி, புனித இடத்தை உல்லாச புரியாக மாற்றுவதா?” என்று நாடு முழுவதும் இந்த வீடியோ கடுமையான சர்ச்சையையும் கண்டனங்களையும் கிளப்பியது.

​இதையடுத்து அதிரடி வேட்டையில் இறங்கிய வாரணாசி போலீஸார், கங்கையை அசிங்கப்படுத்திய அந்த 5 பேரையும் ஸ்பாட்டிலேயே கைது செய்து கம்பிக்கு பின்னால் தள்ளியுள்ளனர். மேலும், அவர்கள் ஆட்டம் போடப் பயன்படுத்திய அந்தப் படகையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளனர். புனித தலத்தின் கண்ணியத்தைக் குலைத்தவர்களுக்குக் கிடைத்துள்ள இந்த அதிரடி சாட்டையடி தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது!