ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் மிகக் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் நாட்டின் சாம்பெரி நகரில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் ஏசி மற்றும் கூலர்களை வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே பாய்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடையின் கதவுகள் திறக்கப்பட்ட அடுத்த கணமே, வெளியில் காத்திருந்த மக்கள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு உள்ளே ஓடியதால் அங்கு பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. பிரான்ஸ் போன்ற ஒரு வளர்ந்த நாட்டில், மக்கள் ஏசி பாக்ஸ்களை தூக்குவதற்காக இப்படி அடியடித்துக் கொள்ளும் அரிய காட்சியைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
🚨🇫🇷 FLASH | La chaleur rend-elle complètement fou ? À Chambéry, des dizaines de clients se sont rués vers les climatiseurs dès l’ouverture d’un magasin. Entre bousculades, tensions et course dans les rayons, la scène a rapidement dégénéré sous les yeux des personnes présentes.… pic.twitter.com/QxELU0eYOz
— Cpasdeslol (@cpasdeslol_X) June 25, 2026
பிரான்ஸ் நாடு தற்போது ‘ஹீட் டோம்’ (Heat Dome) எனப்படும் வளிமண்டல உயர் அழுத்த நிகழ்வை எதிர்கொண்டு வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வெப்ப காற்று பூமிக்கு அருகிலேயே தங்கி, பாரிஸ் போன்ற நகரங்களில் வெப்பநிலை நடப்பு வாரத்தில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. 1872 முதல் 2019 வரையிலான காலகட்டத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பதிவாகியுள்ள வெப்பம் வரலாற்றுச் சாதனை அளவாகக் கருதப்படுகிறது. பிரான்ஸ் மட்டுமின்றி இத்தாலி, ஸ்பெயின் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் இந்த உலகளாவிய வெப்பமயமாதல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் கூலிங் சாதனங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர் என்பதை இந்த எக்ஸ் வீடியோ நமக்கு உணர்த்துகிறது.
