இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அத்தியாவசியப் பகுதியாக மாறிவிட்டன. காலை எழுந்தவுடன் இன்ஸ்டாகிராம், எக்ஸ், ஃபேஸ்புக் என எதிலாவது மூழ்கிவிடும் மக்கள், பொழுதுபோக்கைத் தாண்டி பல வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோக்களையும் தினமும் கண்டுவருகின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில் வேகமாகப் பரவிவரும் ஒரு பைக் ஸ்டண்ட் வீடியோ பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு வாலிபர் கேடிஎம் டியூக் பைக்கை சாலையில் ஓட்டிச் செல்வது போலத் தொடங்குகிறது. ஆரம்பத்தில் அனைத்தும் சாதாரணமாகவே காணப்பட்டாலும், திடீரென சினிமா பாணியில் பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட அந்த வாலிபர் முயல்கிறான். அடுத்த சில விநாடிகளில் பைக்கின் முற்பகுதி காற்றில் உயர்த்தப்பட்டதும், நிலைதடுமாறி அவன் எதிர்பாராத விதமாகப் சாலையில் அடிபட்டு விழுகிறான்.

 

சமூக வலைதளங்களில் லைக்ஸ், வியூஸ் மற்றும் புகழ் பெறும் வெறியில் இன்றைய இளைஞர்கள் தங்களது உயிரைப் பணையம் வைப்பது எந்த வகையிலும் நியாயமற்றது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. இதுபோன்ற ஆபத்தான சாகசங்கள், ஸ்டண்ட் செய்பவரின் உயிருக்குமட்டுமின்றி, அவ்வழியாகச் செல்லும் அப்பாவி பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக முடிகிறது.

தொழில்முறை சாகசக் கலைஞர்கள் மட்டுமே உரிய பாதுகாப்போடு செய்யும் இது போன்ற சாகசங்களைச் சாலைகளில் முயற்சிக்கக் கூடாது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.